Monday, January 02, 2006

அர்ஜென்டினா - 2

போனஸய்ரஸ் நகரின் மையத்தில் அமைந்திருக்கிறது Plaza de Mayo எனப்படும் அர்ஜென்டினாவின் சரித்திரப் புகழ் பெற்ற சதுக்கம்.


சதுக்கத்தின் ஒருபுறத்தில் இருக்கும் cabildo எனப்படும் எளிமையான இந்தக் கட்டிடம் ஆகப் பழமை வாய்ந்தது. 1748-ல் காலனி ஆதிக்கத்தின்போது கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் எவ்வளவோ அரசியல் புரட்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் மவுன சாட்சியாக நிற்கிறது.

Cabildo - விற்கு நேரெதிரில் அமைந்திருப்பது Casa Rosalda (Pink House) எனப்படும் அதிபர் மாளிகை. ஒரு கோட்டையாக இருந்த இந்த கட்டிடம் 1776-ல் அதிபர் மாளிகையாக மாற்றப்பட்டது. சமீப காலம் வரை அதிபரின் இல்லமும் இதே வளாகத்தில்தான் இருந்ததாம். Plaza de Mayo சதுக்கத்தில் இன்றளவும் நடக்கும் அரசியல் ஆர்ப்பாட்டங்களை காரணம் காட்டி சில ஆண்டுகளுக்குமுன் அதிபரின் இல்லம் நகருக்கு வெளியில் மாற்றப்பட்டுள்ளது. அங்கிருந்து தினமும் ஹெலிகாப்டரில் Casa Rosalda-விற்கு வந்து போகிறாராம் அதிபர்.

சதுக்கத்தைச் சுற்றி அமைந்திருக்கும் சரித்திர பிரசித்தி பெற்ற கட்டிடங்களுள் சில.

(இன்னும் வரும்)